இந்தியாவில் முதன் முறையாக திருநங்கைகள் நிகழ்த்தும் சுதந்திர தின விழா..

இந்தியாவில் முதன் முறையாக திருநங்கைகள் நிகழ்த்தும் சுதந்திர தின விழா..


Views: 63 Date: 2 day(s) ago
திருநங்கைகள் நலனுக்காக பணிப் புரியும் 'தோழி" அமைப்பும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தும் திருங்கைகள் காப்பகத்தில் 'சுதந்திர தினவிழாவினை' வெகு சிறப்பாக கொண்டாடினர், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர் திருங்கை தலைவர்கள் பலரை உருவாக்கிய சுனில் மேனன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இவர் 'சகோதரன்" என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆவர். நிகழிச்சியில் திருங்கைகள் காப்பகத்திர்க்கு தேவைப்படும் பொருட்கள் சமூகசேவகி நந்தினி வழங்கினார். இதில் மூத்த திருநங்கை மணியம்மாள் கலந்துக் கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திருங்கைகளுக்கும் தேசப்பற்று, மற்றும் சமூக பொறுப்பு உள்ளது என்பதினை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்த இந்த விழாவில் திருங்கைகளின் ஆதரவாளர்களும் கலந்துக் கொண்டனர். இதில் தோழி பொறுப்பாளர் திலோத்தமா, தோழி அமைப்பின் இயக்குனர் சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.