திரு.வி.கலியாணசுந்தரனாரின் 136வது பிறந்தநாள்: திரு.வி.க வரலாறு....

திரு.வி.கலியாணசுந்தரனாரின் 136வது பிறந்தநாள்: திரு.வி.க வரலாறு....


Views: 28 Date: 2 day(s) ago
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், திரு. வி. கலியாணசுந்தரர் (1883 - 1953) தமிழாசிரியராக இருந்து, பத்திரிகை ஆசிரியராகப் புகழ்பெற்று, அரசியல் தலைவராய் விளங்கி, தொழிலாளர் தலைவராகச் சிறப்புற்று, தமிழறிஞராய், எழுத்தாளர்க்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்தவர். மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். மேலும், மேலும் தமிழகத்துக்கு தொண்டாற்ற வேண்டும். தமிழர்களை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று கருதிய அவர் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.