ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்…

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்…


Views: 18 Date: 2 day(s) ago
இந்தோனேசியாவின் ஜெகார்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்தியது. இது இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்தது.