பாமகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்! மருத்துவர் ராமதாஸ் கொடுத்த முக்கிய பொறுப்பு!

பாமகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்! மருத்துவர் ராமதாஸ் கொடுத்த முக்கிய பொறுப்பு!


Views: 174 Date: 2 day(s) ago
தமிழில் 1990 - 2000 காலங்களில் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபல நடிகராக இருந்தவர் ரஞ்சித். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நடிகர் ரஞ்சித் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் MP ஆகியோரை சந்தித்து தன்னை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்ட நடிகர் ரஞ்சித்துக்கு பாமக மாநிலத்துணைத்தலைவர் பொறுப்பினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வின் போது பாமக மாநிலத்துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.