19 மணி நேரம் பசியால் தவிப்பு! ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 CRPF வீரர்கள்....

19 மணி நேரம் பசியால் தவிப்பு! ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 CRPF வீரர்கள்....


Views: 161 Date: 2 day(s) ago
19 மணி நேரம் பசியால் தவிப்பு! ஓடும் ரயிலை நிறுத்தி சமைத்து சாப்பிட்ட 1500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்.... ரயில் பயணத்தின்போது, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பல மணிநேரமாக உணவு கிடைக்காததால் தாங்களே உணவை சமைத்துச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்...... மத்திய ஆயுத காவல் படை ( crpf) வீரர்கள் 1,500 பேர், பணி நிமித்தமாகக் கடந்த திங்கள்கிழமை (17.9.2018), ஜம்முவிலிருந்து ராய்ப்பூருக்கு சிறப்பு ரயிலில் பயணித்தனர். திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் உணவு அருந்திவிட்டு ரயில் ஏறினர். 11 மணியளவில் ரயில் புறப்பட்டது. மறுநாள் மதியம் வரை உணவு கொடுக்கப்படவில்லை. பொறுத்துப் பொறுத்து பார்த்த வீரர்கள் பசிதாங்க முடியாமல் ரயிலை நிறுத்த முடிவு செய்தனர். அவர்களிடம் உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் பொருள்களும் இருந்தன. எனவே அவர்களாகவே சமைத்து சாப்பிட முடிவு செய்தனர். செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே ரயில் நின்றது. வீரர்கள் அனைவரும் ரயிலிலிருந்து இறங்கினர். தாங்கள் வைத்திருந்த பாத்திரங்களை வைத்து தண்டவாளம் ஓரத்திலும், ரயில் நிலைய பிளாட்பாரத்திலும் அடுப்புகளை வைத்து, தீ மூட்டி சமைக்கத் தொடங்கினர். அவர்களின் நல்ல நேரம், ரயில் நின்றுகொண்டிருந்த ரயில் நிலையம் அருகே நிறைய கடைகள் இருந்தன. எனவே, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருள்களை வாங்கினர். அப்பகுதி மக்கள், வீரர்கள் பசியில் துடித்ததைப் பார்த்து சமையலுக்கு உதவினர். தண்டவாளம் ஓரத்தில் தீ மூட்டி அப்பகுதி மக்களும் சமைத்துக் கொடுத்தனர்.` எங்களுக்கு ரொம்ப பசிக்குது; சமைச்சு சாப்பிட போறோம். ரயில் இங்கேயே கொஞ்ச நேரம் நிற்க உதவி பண்ணுங்க’ என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் அனைவரும் உணவு அருந்திய பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயிலில் பயணித்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்குக் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் உணவு கிடைக்கவில்லை. இது மிகப் பெரிய அவலம்’ என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.