பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்த விராட் கோலி..

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்த விராட் கோலி..


Views: 74 Date: 2 day(s) ago
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 237 ரன்கள் சேர்த்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஓய்வில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல் சதம் அடித்த ரோகித் சர்மா, ஷிகர் தவானுக்கு சச்சின் தெண்டுல்கரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.