செப் 28ல் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து விக்கிரமராஜா கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...

செப் 28ல் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து விக்கிரமராஜா கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...


Views: 50 Date: 2 day(s) ago
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் A.M. விக்கிரமராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் சார்பாக புதுடில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் மூலம் இந்திய சில்லரை வணிகத்தில் கால்பதிப்பதை கண்டித்தும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி ) பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு சுங்கக் கட்டணம் உயர்வு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை போன்ற வணிகர்களை பாதிக்கின்ற சட்டங்களை மாற்றி அமைக்கக் கோரி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் கடையடைப்பு நடத்துவது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடந்த மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக கடையடைப்பு நடத்தப்பட்டது கருத்திற்கொண்டு வரும் இருபத்தி எட்டாம் தேதி தமிழகத்தில் கடையடைப்புக்கு மாற்றாக கருப்பு சட்டை அணிந்து தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.