அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு…


Views: 15 Date: 2 day(s) ago
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது