ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்


Views: 19 Date: 2 day(s) ago
ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் ராமநாதபுரம், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 1.0 முதல் 1.5 வரையிலான அளவுக்கு கடல் அலைகள் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடலோர மீன் பிடிப்பை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக, 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.