நாள்தோறும் நிகழும் சாலை விபத்துகளில் 56 பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர்: மத்திய அரசு

நாள்தோறும் நிகழும் சாலை விபத்துகளில் 56 பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர்: மத்திய அரசு


Views: 24 Date: 2 day(s) ago
நாட்டில், நாள்தோறும் 56 பாதசாரிகள் சாலை விபத்துகளில் கொல்லப்படுவதாக, மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. சாலை விபத்துகளில், 2014ஆம் ஆண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 330 பேராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 457 பேராக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் 133 பேரும், சைக்கிளில் செல்வோரில் 10 பேரும், விபத்தில் சிக்கி உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு நிலவரப்படி, அதிகபட்சமாக, தமிழ்நாட்டில், 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இருசக்கர வாகன விபத்துகளில் 6 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.