ஆசியக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் இந்தியா போராடி தோல்வி!

ஆசியக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் இந்தியா போராடி தோல்வி!


Views: 13 Date: 2 day(s) ago
16 வயதுக்குட்பட்டோருக்கான ஏ.எப்.சி கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், இந்தியா அணி கொரியாவிடம் போராடித் தோல்வியடைந்தது. பதினாறு வயதுக்குட்பட்டோருக்கான ஏ.எப்.சி கோப்பை கால்பந்து போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க பெரிதும் முயற்சி செய்தன. இருப்பினும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில் முதல் பாதி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் அடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆட்டத்தின் 67 நிமிடத்தில் கொரிய அணி ஒரு கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதன்பின்,ஆட்ட நேரம் முடியும் வரை இந்திய அணி கோல் அடிக்க பெரிதும் முயற்சி செய்தது. இருப்பினும் மேற்கொண்டு இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் இறுதியில் கொரிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.