அப்போலோ டயர்ஸ் பவுண்டேஷன் மற்றும் ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் தூய்மை இந்தியா

அப்போலோ டயர்ஸ் பவுண்டேஷன் மற்றும் ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் தூய்மை இந்தியா


Views: 53 Date: 2 day(s) ago

சென்னை, மாதவரத்தில் அப்போலோ டயர்ஸ் பவுண்டேஷன் மற்றும் ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் தூய்மை இந்தியா தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் புதியஜா அலுவலக பெயர் பலகையை சிறப்பு அழைப்பாளர்கள் ஐ.ஓ.சி கைலாஷ் காந், என்.ஜி.சி தங்கராஜ், எம்.டி.டி ஜெயக்குமார், ரோசையா, ரியல் அறக்கட்டளை லாரன்ஸ், கோவிந்தராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்டனி, டினோஜா அனைவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள். பின் விழிப்புணர்வு நடை பயணத்தின் பொழுது நிறுவனங்களுக்கு துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது. விழிப்புணர் விளையாட்டில் குப்பைகளை தரம் பிரிக்கும் போட்டி நடைபெற்றது, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக்கை தவிர்த்தல் பயன்படுத்த அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது. மண்ணின் கலையான பரை நடைபெற்றது மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு கண்காட்சி என பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இதில் வெளிமாநிலத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.