தமிழகம் புதுச்சேரியில் கனமழை-பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் புதுச்சேரியில் கனமழை-பள்ளிகளுக்கு விடுமுறை


Views: 15 Date: 2 day(s) ago
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் மழை பெய்ய துவங்கியுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ளும் படியும் கலெக்டர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை, சேலம், நாகை, கடலூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சையில் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.