தேனி தமிழ் சங்கம் சார்பில் சிலம்பு மற்றும் காந்திய பெருவிழா

தேனி தமிழ் சங்கம் சார்பில் சிலம்பு மற்றும் காந்திய பெருவிழா


Views: 177 Date: 2 day(s) ago
தேனி தமிழ் சங்கம் சார்பில் சிலம்பு மற்றும் காந்திய பெருவிழா தமிழ்ச் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணி அவர்கள் தலைமையிலும் பொருளாளர் கவிக் கருப்பையா, துணைச் செயலாளர்கள் முகமது பாட்ஷா, மு.பிரித்தாநிலா. ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.இவ்விழாவில் தமிழ்த் தொண்டாற்றிய மூத்த தமிழ் அறிஞர்கள் மங்கள தேவி கண்ணகி அறக்கட் Lளைத் தலைவர் தமிழாதன், மாவட்ட சர்வோதய மண்டலத்துணைத்தலைவரும் காந்திய சிந்தனையாளருமாகியசேதுபதி,விகாஷ் கல்வி தாளாளர் இந்தராஉதயக்குமார் ஆகியோருக்கு பாராட்டி சிறப்பித்தனர்.மேலும் இவ் விழாவில் தமிழ் வளர்ச்சி துறைதுணை இயக்குனர் பசும்பொன் அவர்கள்,கவிஞர் வாக் சிங், மதுரை காமராஜர் பல்கலை கழகதமிழியல்துறை முனைவர் சத்தியமூர்த்தி, மொழியியல் துறை பேராசிரியர் முனைவர் உமாராஜ் ஆகியோர் வாழ்த்துறை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ் சங்கத்தின் செயலாளர் பொன்முடி வரவேற்புரையும், இளங்கோ அவர்கள் நன்றி உரையும் நிகழ்த்தினர் இவ் விழாவில் கலந்து கொன்டு வெற்றி பெற்றவர் களுக்கு புத்தகங்களும்.நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.