வடகிழக்கு பருவமழை குறித்து அச்சப்படவேண்டாம்... -ஆர்.பி. உதயக்குமார்.

வடகிழக்கு பருவமழை குறித்து அச்சப்படவேண்டாம்... -ஆர்.பி. உதயக்குமார்.


Views: 36 Date: 2 day(s) ago
தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது, கடலுக்கு சென்று திரும்பாத 132 படகுகளில் 86 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்கவேண்டிய படகுகளில் கிட்டதட்ட 509 மீனவர்கள் உள்ளனர், 15 படகுகளை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அங்கெல்லாம் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்ததந்த துறைகளின் வாயிலாக மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவமழை முழுமையாக வரக்கூடிய காலங்கள். ஆதலால் அவற்றிற்கு தயாராக உள்ளோம். எனக்கூறினார்.