நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது ...

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது ...


Views: 143 Date: 2 day(s) ago
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால்  அவர்களை தேச விரோத வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது ... இந்த கைது நடவடிக்கை கருத்து  சுதந்திரத்திற்கு எதிரான சர்வாதிகார போக்காகும்  ... இந்திய வரலாற்றில் ஒரு மாநில ஆளுநர் புகார் கொடுத்ததும் , ஒரு ஊடகவியளாலர் கைது செய்யப்பட்டதும் இதுவே முதன்முறை மத்தியில் பாஜக ஆட்சி வந்ததில் இருந்து ஆன்டிக்கு ஒரு சட்டம் அரசனுக்கு ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டை காவல்துறை கடைப்பிடிக்கிறது ... எஸ்.வி.சேகர்  , எச் ராஜா போன்றவர்கள் மீது பல புகார்கள் இருந்தும் கைது செய்ய தயங்கும் காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு மட்டும் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்தது இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது ... நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.