4ஆம் ஆண்டு நவராத்திரி கொலு மற்றும் கலைத் திருவிழா 4,000 பொம்மைகள் உள்ளடங்கிய மாபெரும் கொலு கண்காட்சி

4ஆம் ஆண்டு நவராத்திரி கொலு மற்றும் கலைத் திருவிழா 4,000 பொம்மைகள் உள்ளடங்கிய மாபெரும் கொலு கண்காட்சி


Views: 81 Date: 2 day(s) ago

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஜி.கே.எம் காலனியில் நவராத்திரி திருக்கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மிஃ, ஸ்ரீ சக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியின் திருக்கோவில் அருள்மிகு கொடைவள்ளல் திரு. டி.ஆர் வேலுமணி - திருமதி வி.லட்சுமி தம்பதியரால் கட்டப்பட்ட நவராத்திரி கொலு மற்றும் கலைத்திருவிழாவை தேவி யோகி அருளாளர் புண்ணியகோட்டி மதுரை முத்து சுவாமிகள் கொடியேற்றி துவக்கி வைத்தார்.

இதில் கொலு கண்காட்சி 4ஆம் ஆண்டாக நடைபெறு வருகிறது இத்திருக்கோவிலில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சியில் 4000 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன கொலு கண்காட்சி பொம்மைகள் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி பெங்களூர் மைசூர் போன்ற நகரங்களில் இருந்தும் மற்றும் துபாய் தாய்லாந்து எகிப்து போன்ற நாடுகளில் இருந்தும் நேரடியாக சேகரிக்கப்பட்டு கொலு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பொம்மைகள் திருக்கோவிலிலேயே ஸ்தபதிகளால் உருவாக்கம் செய்யப்பெற்றும் இக்கண்காட்சியை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஆன்மீக அன்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.