முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் உலக உணவு தினம் கொண்டாட்டம்...

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் உலக உணவு தினம் கொண்டாட்டம்...


Views: 34 Date: 2 day(s) ago
உலக உணவு தினம் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் முன்னின்று நடத்திய நிகழ்ச்சியில் மனிதனின் அடிப்படை தேவையான உணவை பற்றி விரிவான விளக்கங்கள் தரப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரி கஸ்தூரி கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் "ஒரு படிக்கட்டு" பற்றி விளக்கப்பட்டது. துரித உணவுகளின் பாதிப்புகள் எடுத்துரைக்கப்பட்டு ஆரோக்கியம் தரும் உணவுகளை பற்றிய அறிமுகமும் தரப்பட்டது. உணவு பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது பாதுகாப்பற்ற உணவினால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் தெருவோர கடைகளில் உள்ள உணவு பொருட்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தீமைகள் பற்றியுன் ஆராயப்பட்டன.