சென்னை எவர்வின் பள்ளி குழுமம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்...

சென்னை எவர்வின் பள்ளி குழுமம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்...


Views: 66 Date: 2 day(s) ago
சென்னை எவர்வின் பள்ளி குழுமம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மிக வித்தியாசமான முறையில் மேற்கொண்டனர் இது தங்களின் 85 பள்ளி வாகனங்களை "SAY NO PLASTIC" என்ற ஆங்கில வார்த்தைகளை அந்த பள்ளி வாகனங்கள் மூலம் வடிவமைத்து நிகழ்த்திக் காட்டினர். வரும் ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது அது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அப்பள்ளியின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என 170 பேர் இணைந்து இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டனர். எவர்வின் வித்யாஷ்ரம் மாத்தூர் பள்ளி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பள்ளியின் சி.இ.ஓ.மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தம்மன், முதல்வர்கள் கலையரசி வித்யா ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.