வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில் நவராத்திரி விழா: இ.மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ், பங்கேற்பு!

வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில் நவராத்திரி விழா: இ.மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ், பங்கேற்பு!


Views: 17 Date: 2 day(s) ago
வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே நவராத்திரி துர்கா பூஜை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் இன்று நடைபெற்றது. ஒன்பதாம் நாளான இன்று அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இதில் கோமாதா முன்னிலையில் மகிஷாசுரமர்த்தினிக்கு மலர் அலங்காரத்துடன் முக்கால பூஜைகள் செய்து பரவசத்துடன் காட்சியளித்ததில் பக்தர்கள் பலர் துர்கையின் அருள் பெற்று அன்னதானம் வாங்கி சென்றனர். இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நாட்டிய கலை நிகழ்ச்சியில் நரகாசுரனை வதம் செய்த காட்சி அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் ஆர்.எஸ் ராஜேஷ் ஆகியோருடன் அமர்ந்து ரசித்த ஆயிரக்கணக்கானோர் நிஜகாட்சிப்போல் பக்தியுடன் பார்த்தனர். நிகழ்ச்சியில் பரத நாட்டிய நடனமாடிய மாணவிகள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை ஆர்.எஸ்.ராஜேஷ், வழங்கினார். விழாவில் ஆர்.எஸ். ஜனார்த்தனம், ஏ.கணேசன், ஜெ.கே.ரமேஷ், ஜி.கிருஷ்ணவேணி, வி.அலெக்ஸ், ஆட்டோ தேவராஜ், எம்.என்.சீனிவாசபாலாஜி, வியாசை எம்.இளங்கோவன், ஆர்.நித்தியானந்தம், ஆர்.வி.அருண்பிரசாத், வி.எஸ்.புருஷோத்தமன், சந்தனசிவா, டைகர் தயாநிதி, சுஜாதாமதனகோபால், ஜூபிடர் பாலன், ஏ.வினாயகமூர்த்தி, மாரியம்மாள், வேல்முருகன், செல்வகுமார், எஸ்.ஆர்.மணி, மா.செ.தினேஷ், எல்.எஸ். மகேஷ்குமார், எஸ்.பாலமுருகன், சுப்பிரமணியன், ஜி.பாரதி, எம்.நாகூர்மீரான், நெல்லை கே.குமார், எஸ்.ஆர்.மணி, அன்பு, ஜெ.சுஜாதா, மாதவன், சேகர், உள்பட பெரம்பூர், மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், பிற அணி அமைப்பு நிர்வாகிகள் உள்பட அதிமுகவினர் பலர் இருந்தனர்.