குலசேகரபட்டினம் தசரா திருவிழா: மகிஷாசூரனை வதம் செய்தார் முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: மகிஷாசூரனை வதம் செய்தார் முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


Views: 17 Date: 2 day(s) ago

தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நேற்று முன் தினம் நள்ளிரவில் மகிஷாசூரனை கடற்கரையில் முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியை லட்சக்கணக் கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இவ்விழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. தினமும் சிறப்பு பூஜைகள், சமய சொற்பொழிவு, பக்தி இன் னிசை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற் றன. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

 

10 ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் சூரசம்ஹார நிகழ்ச்சிக் காக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற் கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளினார். மற்றொரு வாகனத்தில் மகிஷாசூரன் சிம்ம முகத்துடன் வர, அம்மனின் சூலா யுதம் அவனை வதம் செய்தது. தொடர்ந்து, எருமை, சேவல் முகத் துடனும், இறுதியாக சுயரூபத்திலும் வந்த மகிஷாசூரனை சூலாயுதத் தால் முத்தாரம்மன் வதம் செய்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வேடம் புனைந்து வந்திருந்த தசரா குழுவினர் விடிய, விடிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

தொடர்ந்து, நேற்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். மாலையில் அம்மன் கோயிலை சேர்ந்ததும் வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்து, விர தத்தை முடித்துக் கொண்டனர்.