தாமிரபரணி மகா புஷ்கர விழா.. லட்சக்கணக்கானோர் புனித நீராடல்..!!

தாமிரபரணி மகா புஷ்கர விழா.. லட்சக்கணக்கானோர் புனித நீராடல்..!!


Views: 17 Date: 2 day(s) ago

தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. விழாவின் 11-வது நாளான நேற்று தாமிரபரணி படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, உ.பி. உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்று புனித நீராடினர்.

புஷ்கர விழா இன்றுடன் நிறைவடைவதால் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாமிரபரணியில் நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் தாமிரபரணியில் நீராடியதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.