ஹாக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

ஹாக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா


Views: 19 Date: 2 day(s) ago

ஆசியன் சாம்பியன்ஸ் டிரோபி ஹாக்கி தொடர் ஓமனில் நடைப்பெற்று வருகின்றது. இதில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றுள்ளது. 

ஆசியன் சாம்பியன்ஸ் டிரோபி ஹாக்கி தொடர் ஓமன் நாட்டின் சுல்தான் கபோஸ் விளையாட்டு வளாகத்தில் நடைப்பெற்று வருகின்றது. 
இதில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான், ஓமன் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. 

இதில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் ஓமனை எதிர்கொண்டது. இதில் இந்தியா 11 - 0 என்ற கோல் கணக்கில் அற்புதமாக வென்றிருந்தது. இத்தொடரில் இந்தியா விளையாடிய 2வது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்க் கொண்டது. 

மிக விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியாவின் மன்பிரீத் சிங் 24’ வது நிமிடம், மந்தீப் 33’, தில்பிரீத் 42’ ஆகியோர் கோல் அடிக்க இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.