குமரி மாவட்டம் : உஜ்ஜினி மகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்...

குமரி மாவட்டம் : உஜ்ஜினி மகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்...


Views: 25 Date: 2 day(s) ago
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள சேதுபுதியூரில் உள்ள அருள்மிகு உஜ்ஜினி மகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை தொடர் சிறப்பு பூஜைகள், பால், பண்னீர், இளநீர் உள்ளிட்ட அபிசேகங்களும் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலளார்கள் திருமதி சாரு பால தொண்டைமான், கே.டி. பச்சைமால் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க கோவிகளில் புத்தளம் அருகே உள்ள சேதுபுதியூரில் உள்ள அருள்மிகு உஜ்ஜினி மகாளியம்மன் கோவிலும் ஓன்று. இக் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ள வீமானங்களுக்கு பயன்படுத்தப்பட்ட கும்பாபிசேக தீர்த்தத்தை கோவில் பூசாரிகள் பக்தர்களுக்கு தெளித்தனர். அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சிறப்பு வாய்ந்த வினாயகருக்கு தொடர்ந்து மாலை வரை தொடர் சிறப்பு பூஜைகள், பால், பண்னீர், இளநீர் உள்ளிட்ட அபிசேகங்களும் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலளார்கள் திருமதி சாரு பால தொண்டைமான், கே.டி. பச்சைமால் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.