கொடுங்கையூரில் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி...

கொடுங்கையூரில் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி...


Views: 54 Date: 2 day(s) ago
சென்னை பெருநகர பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும் கொடுங்கையூர் பாரதி சாலையில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி சார்பில் மாணவ மாணவிகள் "டெங்கு விழிப்புணர்வு பேரணி" நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளி சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கியும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற பரவும் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாகச் சென்றனர் இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.