ஜெகன்மோகன் ரெட்டி மீது கத்தியால் தாக்குதல் முயற்சி: தீவிர விசாரணை நடத்த ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா உத்தரவு...

ஜெகன்மோகன் ரெட்டி மீது கத்தியால் தாக்குதல் முயற்சி: தீவிர விசாரணை நடத்த ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா உத்தரவு...


Views: 35 Date: 2 day(s) ago
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கோழி சண்டையில் பயன்படுத்தப்படும் கத்தியால் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட சீனிவாசராவிடம் தீவிர விசாரணை நடத்த ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா உத்தரவு. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா, மக்கள் பிரதிநிதிகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை எங்களை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய சீனிவாச ராவ் விமான நிலையத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்பவர் என்று தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவர் எப்படி விமான நிலையத்திற்குள் கொண்டு சென்றார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பற்றி விமான நிலைய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய சீனிவாசராவை கைது செய்துள்ள விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர் என்று அப்போது கூறினார்.