பணியிடங்களில் பாலியல் புகார்கள்: ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு…

பணியிடங்களில் பாலியல் புகார்கள்: ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு…


Views: 22 Date: 2 day(s) ago
பணியிடங்களில் ஏற்படும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க 9 அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழு, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்ட ரீதியான விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பான விஷயங்களை ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி, நிதின் கட்காரி உள்ளிட்ட 9 மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.ஏராளமான பெண்கள் மீ டூ என்பதை பின்பற்றி தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தப் புகார்களை சமூக தளங்களில் பதிவு செய்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.