தேனி மாவட்டம் தேவராம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பவள விழா...

தேனி மாவட்டம் தேவராம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பவள விழா...


Views: 148 Date: 2 day(s) ago
தேனி மாவட்டம் தேவராம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பவள விழாவினைமுன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்.  மாவட்ட கல்வி அலுவலர் வெ.திருப்பதி முன்னிலையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தேவராம் ஜமின்தாரும், தேவராம் காவல்துறை கண்காணிப்பாளரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கண்கானிப்பு கேமராக்கள், பள்ளியின் அனைத்து சுவற்றுக்கும் கலர் வண்ணங்கள் அடிக்கப்பட்டன .முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குவேந்திரன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்கள்.