டெல்லி: 10 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: 10 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


Views: 13 Date: 2 day(s) ago
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 10 ஆண்டுகள் முடிந்த பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் முடிவடைந்த பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. முன்னதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே 15 ஆண்டுகள் முடிந்த பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து தீர்ப்பு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.