கொடுங்கையூர் சேலவாயல் தேவர் நற்பணி மன்றம் சார்பில் "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா"

கொடுங்கையூர் சேலவாயல் தேவர் நற்பணி மன்றம் சார்பில் "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா"


Views: 28 Date: 2 day(s) ago
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை, கொடுங்கையூரில் சேலவாயல் தேவர் நற்பணி மன்றம் சார்பில் பர்மா மஹாலில் "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா" மற்றும் 58வது ஆன்மீக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சேலவாயல் தேவர் நற்பணி மன்றம் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி தேவரின் மக்கள் ஒன்றிணைந்து முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் 1500 பேருக்கு மாபெரும் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலவாயல் தேவர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தேவரின் புகழ் பாடினர்.