சீனா - பாகிஸ்தான் இடையே புதிய பஸ் போக்குவரத்து - நவம்பர் 3-ம் தேதி தொடக்கம்

சீனா - பாகிஸ்தான் இடையே புதிய பஸ் போக்குவரத்து - நவம்பர் 3-ம் தேதி தொடக்கம்


Views: 16 Date: 2 day(s) ago
இந்தியாவின் பகைநாடான பாகிஸ்தான் மீது சீனா அளவுகடந்த பாசத்தை பொழிந்து, அக்கறை காட்டி வருகிறது. சீனாவின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் அரபிக்கடலை ஒட்டி பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை சீனாவில் தன்னாட்சி உரிமைபெற்ற உய்குர் பகுதியுடன் இணைக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் ஆகியவற்றின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம். இந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணம் 13 ஆயிரம் ரூபாயாகவும், இருவழி (சென்று, திரும்ப) கட்டணம் 23 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதி தற்போது வரை இல்லை. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக இந்த பஸ் சென்றுவரும். வாரத்தில் 4 நாட்கள் இந்த பஸ் போக்குவரத்து நடைபெறும் என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.