உலகின் மிக உயரமான படேல் சிலை - மோசமான தமிழ் மொழிபெயர்ப்பாள் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி..

உலகின் மிக உயரமான படேல் சிலை - மோசமான தமிழ் மொழிபெயர்ப்பாள் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி..


Views: 232 Date: 2 day(s) ago

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயரமான சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.இந்த சிலை, உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும் ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையினை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது. ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் ஆனால்,

‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருவதையடுத்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.