இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ஜே.அப்துல் ரஹீம் செய்தியாளர் சந்திப்பு...

இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ஜே.அப்துல் ரஹீம் செய்தியாளர் சந்திப்பு...


Views: 78 Date: 2 day(s) ago
சென்னை, திருவல்லிக்கேணியில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில நிர்வாக குழு கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது கூட கொண்டாட்டங்களுக்கு நேரம் நினைத்து மத விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவதை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த இருபது தொகுதிகளுக்கும் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலிலும் இந்திய தேசிய லீக் கட்சி தொடர்ந்து அரசு.ம.மு.க.வை ஆதரிக்கிறது. முத்தலாக் விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு அவசர சட்டம் இயற்றியது வன்மையாக கண்டிக்கின்றோம். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பயன்படுத்தும் #Metoo என்ற பிரசார இயக்கத்தை, தமிழகத்தில் chinmayi போன்றவர்கள் தவறாக பயன்படுத்தி கண்ணியமானவர்கள் மீது அவதூறு பரப்புவதை கண்டிக்கின்றோம். எம்ஜிஆர் நூற்றாண்டு மற்றும் மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு விழாவின் போது 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை அரசு விடுதலை செய்து வருகிறது. இதில் முஸ்லிம் சிறைவாசிகள் புறக்கணிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம் இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் தடா ஜே அப்துல் ரஹீம் மாநில செயல் தலைவர் தடா நிஜாமுதீன் பொதுச்செயலாளர் மதுரை ராஜா உசேன் என பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்