Rotary Club Dist 3232 | "Diwali Smiles" Distribution of New Clothes & Sweets to poor people

Rotary Club Dist 3232 | "Diwali Smiles" Distribution of New Clothes & Sweets to poor people


Views: 10 Date: 14 hour(s) ago
எல்லோரும் இன்புற்று வாழ்வதே, நல்லோரின் நலமிக்க கடமையாகும் என்ற உன்னத நோக்கத்தை உயர்வாக கொண்டு உலக மானிடம் உவர்ந்து உதவும் உள்ளங்கள் ஒன்று கூடி உருவாக்கிய "ரோட்டரி கிளப் சென்னை சோழா சங்கம்" இன்று தீபாவளி திருநாள் கொண்டாட்டம் தனக்கென்று இல்லாமல் தன் இன மக்கள் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று கொண்டாடுகின்றது. புத்தாடை, இனிய பலகாரம் என்றுமே கிடைக்காத ஏழை மக்களுக்கு ரோட்டரி சங்கம் இன்று வழங்குகிறது. வருடம் தோறும் 500 பேருக்கு கொடுக்கிறது வழக்கம். இன்னும் இப்பணி தொடரும் என்று 'சோலா ரோட்டரி சங்கம்' தலைவர் SP. ரமேஷ் கூறினார். தொடர்ந்து இப்பணியை 10 வருடமாக செய்து வருகின்றனர். சிறப்பு விருந்தினர்களாக, ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு. பாபு பேரம், கலைமாமணி திரு.அபிராமி ராமநாதன் (தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தலைவர்), திரு.R.சிவகுமார் ஐ.பி.எஸ் (துணை ஆணையாளர் சென்னை) மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சென்னை கீழ்பக்கத்தில் இருக்கும் பரைடு ஹோட்டலில் இன்று மாலை நடத்தி சிறப்பித்தனர்.