போலீஸ் பாதுகாப்பில் சபரிமலை-முதல் முறையாக பணியமர்த்தப்பட்ட பெண் காவலர்கள்

போலீஸ் பாதுகாப்பில் சபரிமலை-முதல் முறையாக பணியமர்த்தப்பட்ட பெண் காவலர்கள்


Views: 20 Date: 2 day(s) ago
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து சமீபத்தில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட போது சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றதால், அந்த இடமே கோர்க்களமானது. இந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதன் விசாரணை நவம்பர் 11 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மீண்டும் நடைதிறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி 1500 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் பெண் பக்தர்கள் வந்தால் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் சன்னிதானம் பகுதியில் முதல்முறையாக 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.