அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் தீபாவளி வாழ்த்து...

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் தீபாவளி வாழ்த்து...


Views: 26 Date: 2 day(s) ago
நமது இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பேணிக்காப்பது தேசத்தின் அடிப்படைத் தத்துவங்களான மதசார்பின்மையும், சகிப்புத் தன்மையும் தான். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் காலங்காலமாக பின்பற்றிவரும் மரபுசார்ந்த, கலாச்சார வழிபாடுகளையும், செயல்முறைகளையும் மாற்றி அமைக்கும் சூழலை உருவாக்கி வருகிறது. ஒரு மதம் சார்ந்த சிறப்பான பண்டிகைகள் கொண்டாடப்படும் போது மற்ற மதத்தினர் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும், இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வதே நமது பாரத ஒருமைப்பாட்டின் அடிப்படையும், ஆணிவேரும் ஆகும். அந்த அடிப்படை பண்புகள் மேன்மேலும் தழைத்தோங்க கலாச்சாரத்தை மூழ்கடிக்கும் இருளை அகற்றி, சமத்துவ, சகோதரத்துவ ஒளி ஏற்றி இனிய தீபாவளியை கொண்டாடுவோம். ”பாதுகாப்பான தீபாவளி, ஆரோக்கியமான பெருவாழ்வு” என்ற எண்ணத்துடன் சீனப்பட்டாசுகளை தவிர்த்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களையும், உழைப்பாளிகளையும் வாழவைக்கும் சிவகாசி பட்டாசுகளை வாங்கி பாதுகாப்புடன் வெடிப்போம். …2 ..2.. நமது தமிழக வணிகர்களின் வாழ்வில் ஒளியூட்டும் விதமாக புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசு மத்தாப்புகளுடன் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவிட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் தீபாவளித் திருநாளில், அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.