தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்த்துக்கள் - பேராசிரியர் காதர் மொகிதீன்

தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்த்துக்கள் - பேராசிரியர் காதர் மொகிதீன்


Views: 14 Date: 2 day(s) ago
தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்த்துக்கள் தீபாவளியை கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஒளி-பிரகாசம்-வெளிச்சம் என்பதுடன் தொடர்புடைய தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மை யும், உண்மையும்,மென்மையும் உன்னத மனிதநேய தன்மையும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம். இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாச்சாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். இந்த உணர்வில் நம்பிக்கையுள்ள நல்லவர்கள், இந்திய தேச மக்களை வேற்றுமையில் ஒற்றுமை பேணுகிற மக்களாக வாழ வழிகாட்ட வேண்டும். உலகளவில் இந்திய ஜனநாயகம் உயர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம் அண்ணல் மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆஸாத் போன்ற பெரும் தேசிய தலைவர்கள், எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் இதயப்பூர்வமாக ஒருமனப்பட்டு , ஓர்மை உணர்வோடு வாழ்வதற்கான அரசியல் பண்பாட்டை உருவாக்கி தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். மத துவேஷம், மத விரோதம், மத குரோதம், மத மறுப்பு, மத வெறுப்பு, மத கிலேசம், மத மாச்சரியம் போன்ற தீமைகளிலிருந்து நாட்டை பாதுக்காக்கக்கூடிய சிறு நெறியை முந்தைய தேசிய தலைவர்கள் காட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்த நெறிமுறையை ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அவரவர் மதம், அவரவருக்குரியது. அவரவர் செல்லும் வழி, அவரவர் விரும்பும் வழி. இந்திய மக்கள் அனைவரும் செல்லும் பொதுவான வழி இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற வழி. அந்த வழியில் எல்லோரும் செல்வோம், இந்திய திருநாட்டை பொன்கொழிக்கும் நல்லரசாக வெல்வோம். எல்லோருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.