தமுமுக சார்பில் ரூ.63 லட்சத்திற்கான காசோலை கேரள முதல்வரிடம் வழங்கப்பட்டது...

தமுமுக சார்பில் ரூ.63 லட்சத்திற்கான காசோலை கேரள முதல்வரிடம் வழங்கப்பட்டது...


Views: 12 Date: 2 day(s) ago
பெரு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமுமுக அறக்கட்டளை சார்பாக வசூலிக்கப்பட்ட ரூ.63,30,374/& (ரூபாய் அறுபத்து மூன்று லட்சத்து முப்பதாயிரத்து முன்னு£ற்று எழுபத்தி நான்கு) கேரள நிவாரண நிதி இன்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களிடம் வழங்கப்பட்டது. தமுமுக தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் என். ஷபியுல்லா கான், மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மமக பொருளாளர் கோவை இ.உமர் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக வெள்ள பாதிப்பின் போது, தமுமுக சார்பாக கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, அதானி, ஆல்வா, ஆலப்புழா, திருச்சூர்,மலப்புரம் ஆகிய பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில்லான நிவாரண மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.