டி.டி.வி.தினகரன் அறிவித்திருக்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றி அடைய வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து...

டி.டி.வி.தினகரன் அறிவித்திருக்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றி அடைய வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து...


Views: 24 Date: 2 day(s) ago

அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

மக்கள் செல்வர் TTV அறிவித்திருக்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் அறவழியில் போராட மக்கள் செல்வர் தலைமையில் உண்ணா நோன்பு மேற்கொள்ள இருக்கிறார்கள். அவர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.அம்மாவால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களான திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம், பசுமை வீடு, அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், மகளிருக்கு ஸ்கூட்டி, விலையில்லா கால்நடைகள், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, நோட்டு, புத்தகங்கள் , ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கான சேலை, வேஷ்டி, பொங்கல் பொருள்கள் என எண்ணில் அடங்கா பல திட்டங்கள், ஆனால் இன்று அம்மாவின் பெயரால் ஆட்சி நடத்தும் மக்கள் விரோத அரசு அம்மா அறிவித்த நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதிகளிலும் மக்கள் அடிப்படை வசதிகளான சாலை பராமரிப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த அனைத்து விதமான அரசு சார்ந்த எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மக்களுக்கு போதிய சுகாதார வசதி இல்லாத காரணத்தால் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே இந்த மக்கள் விரோத அரசு விரைவில் பதிவு விலக வேண்டும். மீண்டும் அம்மாவின் நல்லாட்சியும், நலத்திட்டங்களும் மக்கள் செல்வரின் தலைமையில் அமையப்போகும் ஆட்சியில் நிறைவேறும்.

அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். அம்மாவின் நல்லாட்சி தொடர மக்கள் செல்வர் அறிவித்துயிருக்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

என அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவருமாகிய வி. எம். எஸ். முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.