பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்..

பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்..


Views: 14 Date: 2 day(s) ago
பாடியநல்லூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் விலையில்லா மிதிவண்டிகள் 575 மாணவ மாணவர்களுக்கு அளித்து ஸ்மார்ட் கிளாஸ் ரூம் தானியங்கி வருகைப்பதிவு மற்றும் வருகை பதிவினை பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் முறை துவக்கி வைக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்களில் ஒன்றான விலையில்லா மிதிவண்டி திட்டம் சிறப்புமிகு திட்டமாகும் இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகள் 128 பள்ளிகளில் 98 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 22 நிதியுதவி பள்ளிகள் 5 ஆதிதிராவிடர் பள்ளிகள் மாணவர்கள் பயில்கின்றனர் மாநகராட்சி பள்ளிகள் ஆக மொத்தம் 128 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது இம்மாவட்டத்தில் 128 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு பயிலும் 7734 மாணவர்களுக்கும் 11457 மாணவிகளும் ஆக மொத்தம் 19191 மாணாக்கர்கள் பயில்கின்றனர். திருவள்ளூர் வருவாய் மாவட்ட முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழக அரசால் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுனியம் பலராமன், அலெக்சாண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.