அம்மா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் காட்டம்…

அம்மா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் காட்டம்…


Views: 15 Date: 2 day(s) ago
அம்மா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வீரமாமுனிவர் 16-ம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர். முதலில் தைரியநாத சுவாமி என்று பெயர் வைத்தார்கள். வட மொழிசொல் தமிழில் கலக்கக்கூடாது என்பதற்காக அந்த பெயரை மாற்றி வீரமாமுனிவர் என்று மாற்றியவர். தன்னுடைய பெயரில் வீரத்தை கொண்டு வந்தவர். அவரின் 338-வது பிறந்தநாள் விழா அரசின் சார்பில் கொண்டாப்பட்டு வருகிறது. 16-ம் நூற்றாண்டில் பிறந்து 17-ம் நூற்றாண்டில் மறைந்த வீரமாமுனிவர் எவ்வளவே தமிழ் நூல்களை எழுதியுள்ளார். உலகம் உள்ளவரை. தமிழ் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து இருக்கும். இப்போது திரைப்படம் எடுப்பவர்கள், குறிப்பாக நடிகர்களுக்கு எல்லாம் பேஷனாகி விட்டது. அம்மா இல்லாமல் குளிர் விட்டு போச்சு. அதுதான் முக்கியம். அம்மா இருக்கும்போது இதுபோன்ற கருத்து வந்ததா? அம்மா இருக்கும்போது இதுபோன்ற படத்தை எடுத்திருந்தால் உண்மையிலேயே நாங்கள் மெச்சியிருப்போம். இப்போது கோழைகளை போல செயல்படுகிறார்கள். ஒவ்வொருக்கும் ஒரு ஆசை இருக்கும். திரைப்படத்தில் முதலமைச்சராக நடிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். இது ஒன்றும் தவறு இல்லை. தங்களுடைய கொள்கை, லட்சியத்தை சொல்லி படம் எடுத்தால் தவறு இல்லை. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா? என்பது பிறகு முடிவு செய்ய வேண்டியது. ஆனால் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக பிறரின் உணர்வுகளை மிதித்து ,அவர்களுடைய எண்ணங்களை சிதைத்து, எல்லா தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து, அவர்களை முன்னிலைப்படுத்தி கொள்வதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட அமைச்சர் கூறியதுபோல ஒரு திரைப்படம் என்பது மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்கின்ற சாதனமாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் புரட்சித்தலைவர் படம் எடுக்கப்பட்டது. இப்போது உள்ளதுபோல ஏதாவது பிரச்சினை வந்ததா. இன்று மட்டுமல்ல எல்லா காலத்திலும் போற்றப்படகூடிய தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாதிரி வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருக்காலும் நடக்காது. புரட்சித்தலைவர் புரட்சித்தலைவர்தான். ஒரே எம்ஜிஆர் தான். இவர்கள் தலைகீழாக நின்றாலும் எம்ஜிஆர் போல் ஆகமுடியாது. என்னதான் அழுது புரண்டாலும் புரட்சித்தலைவருக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தை போன்று இவர்கள் யாருக்கும் அளிக்க மாட்டார்கள். எனவே மாறுபட்ட கருத்து இருக்கும் காரணத்தினால் சட்ட அமைச்சர் குறிப்பிட்டதுபோல திரைப்பட குழுவினர் மீதுநடவடிக்கை இருக்கும். திரைப்படத்தில் ஏன் அந்த பெயரை வைக்கவேண்டும். மறைந்த முதல்வர் குறித்து வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் பெயரை வைத்துள்ளார்கள். இது இழிவுப்படுத்தும் செயல்தானே? மனதை புண்படுத்தும் செயலை எப்படியும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு பண மதிப்பிழப்பு உள்ளிட்ட எந்த சீர்திருத்த நடவடிக்கை எடுத்தாலும் சரி இதனை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள்தான். இதற்கு எல்லாம் விடை2019-ம் ஆண்டு தெரியும். கழகமும் ,டிடிவி தினகரன் கட்சியும் இணைவது என்பது தனியரசுவின் கனவாக இருக்கலாம். அது கானல் நீர்தான். அது நடக்காத ஒன்று. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. 2016-ல் தி.மு.க. வலுவான கூட்டணி வைத்தது. கடைசியில் என்ன ஆனது. அதுபோலத்தான் அடுத்த தேர்தலும், அதற்கு அடுத்த தேர்தலும். இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.