3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி போராட்டம் செ.கு.தமிழரசன் பங்கேற்ப்பு..

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி போராட்டம் செ.கு.தமிழரசன் பங்கேற்ப்பு..


Views: 55 Date: 2 day(s) ago
இந்திய குடியரசு கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைபத்தை கண்டித்தும், சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் பறக்கும் இரயில் திட்டத்திற்காக குடிசைகளை அகற்றுவதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் S.மகிமைதாஸ் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் செ.கு.தழிழரசன் கண்டண உரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் மாநில துணை தலைவர் தலித். இ.முருகன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் க.மங்காபிள்ளை, மாநில நிர்வாகிகள் தங்கராஜ், நாகராஜ் மற்றும் மாநில தொழிற்சங்க செயலாளர் D.இருதயநாதன் உள்ளிட்ட சென்னை மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.