SC என்று கூறிய பெண் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை..!! பெண் மீது தாக்குதல்..!! புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு

SC என்று கூறிய பெண் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை..!! பெண் மீது தாக்குதல்..!! புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு


Views: 92 Date: 2 day(s) ago
புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஏர்போர்ட் த.மூர்த்தி இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் பட்டியல் மக்கள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வீடுகள் சூறையாடப்படுவதும் மக்கள் தாக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது பல இடங்களில் கோவில்களுக்குள் நுழைய இன்னமும் பட்டியல் இன மக்கள் நுழைய முடியாத நிலை இன்னமும் நீடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்ன மண்டல் கிராமத்தில் பிரியதர்ஷினி என்ற பெண் கோவில் குடமுழுக்கு விழாவில் ஹோமகுண்டத்தில் சுற்றி வர முயன்றபோது அதை சுற்றிவர ஒவ்வொருவராக சாதியை கேட்டு அனுமதித்துள்ளனர் இவர் எஸ் சி என சொன்னவுடன் உனக்கெல்லாம் உள்ளே வர அனுமதியில்லை எனத் தடுத்தும் அப்பெண்ணை தாக்கியும் உள்ளனர் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் மேற்படி தாக்கிய நபர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நபரை அரசு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி கூறினார். மேலும் பெண்கள் முதியோர்கள் குழந்தைகள் போன்றோர் தங்கள் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் helpline எண்ணை அறிவித்து உள்ளது போல எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் குறித்து எந்நேரமும் உடனுக்குடன் புகார்களை தெரிவிக்க உடனடியாக என் பிள்ளை என்னை Helpline எண்ணை வேண்டும் எனவும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின் படி மாவட்டந்தோறும் Sc,St வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் தலித் மக்கள் முன்னணி தலைவர் நெல்லை மணி, தமிழர் சேனை தலைவர் எரிமலை இராமச்சந்திரன், சைதை அன்புதாசன், உள்ளிட்ட அம்பேத்கர் இயக்கங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.