பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க திருமண மண்டபத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்..

பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க திருமண மண்டபத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்..


Views: 27 Date: 2 day(s) ago
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனியில் உள்ள பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்கத்தின் திருமண மண்டபம் திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருமண மண்டபத்தை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மு க ஸ்டாலின் திருமண மண்டபத்தையும் பெருந்தலைவர் காமராஜர் சிலையையும் திறந்து வைத்து விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக விஜிபி குழும தலைவர் விஜி சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன், சென்னை, சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி, நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் உள்ளிட்ட பல்வேறு நாடார் அமைப்பு தலைவர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பிற நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.