அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் மிலாடி நபி வாழ்த்து...

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் மிலாடி நபி வாழ்த்து...


Views: 26 Date: 2 day(s) ago
”மற்றவர்கள் மனதை புண்படுத்தாதீர்கள், பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்” என்று அன்பு வழியிலும், அற வழியிலும் மனித குலம் நடைபோட வேண்டும் என்பதற்காக, தம் வாழ்நாளை அர்ப்பணித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அவதாரத் திருநாளை உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் போற்றி மகிழ்கின்றனர். மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவம், கருணை, கொடை ஆகிய நற்பண்புகள் அனைவரது உள்ளங்களிலும் மலர்ந்திட, அண்ணல் நபிகளாரின் சீரிய கொள்கைகளை கடைபிடித்திட உறுதி ஏற்போம். அமைதியை போற்றும், மதச்சார்பின்மை என்னும் மகத்துவக் கொள்கை கொண்ட நமது தேசத்தில், நபிகளார் போதித்த சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவதாரத்திருநாளாம் மிலாடி நபியை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.