தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளருமான வி.எம்.எஸ்.முஸ்தபா மிலாடி நபி வாழ்த்து...

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளருமான வி.எம்.எஸ்.முஸ்தபா மிலாடி நபி வாழ்த்து...


Views: 155 Date: 2 day(s) ago
உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளருமான வி.எம்.எஸ்.முஸ்தபா மிலாடி நபி வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நபிகள் நாயகம் ஸல்லலாகு அலைகு சல்லம் தோன்றிய தினத்தை இஸ்லாமியர்கள் ஆகிய நாம் மிலாடி நபி என்று அவர் பெயரிலேயே கொண்டாடி மகிழ்கின்றோம். இறைவனால் நியமிக்கப்பட்ட இறுதி தூதுவர் நாயகம் அவர்கள். இஸ்லாம் என்னும் மார்க்கத்தை இந்த உலகிற்கு எடுத்துரைத்ததோடு மட்டும் அல்லாது வாழ்ந்தும் காட்டினார்கள். அறியாமை காலத்தில் அரபு நாடுகளில் பெண் சிசு பிறந்தவுடன் கொள்ளப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். நபிகள் நாயகத்தின் மற்றொரு சிறப்பு பிறந்த தினத்திலேயே இயற்கை எய்தினார்கள். இந்நாளில் நாம் அனைவரும் நபிகள் நாயகத்தின் போதனைபடி நடந்து நாயகம் ஸல்லலாகு அலைவஸ்ஸாம் அவர்களுக்கு பெருமை சேர்ப்போமாக என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளருமான V.M.S. முஸ்தபா மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.