தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு...

தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு...


Views: 14 Date: 2 day(s) ago
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு குடிநீர், தார்ப்பாய்கள், மெழுகுவர்த்திகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், புத்தாடைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இதனை கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.