கஜா புயல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வானிலையை காரணம் காட்டி பாதியிலேயே திரும்பிச் சென்றதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான V.M.S.முஸ்தபா கடும் கண்டனம்..

கஜா புயல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வானிலையை காரணம் காட்டி பாதியிலேயே திரும்பிச் சென்றதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான V.M.S.முஸ்தபா கடும் கண்டனம்..


Views: 136 Date: 2 day(s) ago
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வானிலையை காரணம் காட்டி பாதியிலேயே திரும்பிச் சென்றதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவருமாகிய வி. எம். எஸ். முஸ்தபா கடும் கண்டனம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாண்புமிகு என்ற பட்டத்தை பெற்றவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ரம்மியமான சூழ்நிலை தேவைப்படுகிறது. மக்கள் திலகம் புரட்சித் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், அவர் முதல்வராக இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி, முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை கட்டிய வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தவர். அந்த இயக்கத்தின் பேரில் ஆட்சி நடத்தும் E.P.S மக்களை சந்திக்க பயப்பட்டு வானிலையை காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் மந்திரிகள் ஓட, ஓட விரட்டப்பட்டார்கள் ஒரு மந்திரி சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார். இந்த மக்கள் விரோத அரசு விரைவில் முடிவு காலம் பிறக்கும். மக்கள் செல்வரின் தலைமையில் அமையப்போகும் ஆட்சியில் மகத்தான அம்மா ஆட்சி மலரும் மக்கள் துயர் தீரும். இன்று வானிலையை காரணம் காட்டி பயணத்தை பாதியில் நிறுத்திய முதல்வர் E.P.S க்கு ஒரு வரலாற்று சம்பவத்தை நினைவூட்ட கடமை பட்டுள்ளேன். சென்னை மாகாண முதல்வராக இராஜாஜி அவர்கள் இருந்த வேளையில் ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியூர் பயணம் மேற்க்கொள்ள புறப்பட்டு சென்ற போது,சென்னை மருத்துவக் கல்லூரி அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது சென்னை மாகாண முதல்வர் இராஜாஜி அவர்கள் கால்நடையாக நடந்தே சென்று இரயில் நிலையத்தை அடைந்தார். அவர் முதல்வரா? இல்லை இந்த E.P.S முதல்வரா? இவ்வாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊடகச் செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவருமாகிய வி. எம். எஸ். முஸ்தபா தனது கடும் கண்டனத்தைத் இந்த அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளார்.