சென்னை மாதவரத்தில் மீண்டும் ரூ.500, 1000 நோட்டுகள் பறிமுதல்..

சென்னை மாதவரத்தில் மீண்டும் ரூ.500, 1000 நோட்டுகள் பறிமுதல்..


Views: 19 Date: 2 day(s) ago
சென்னை அருகே மாதவரத்தில் நேற்று மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் கத்திரிக்கப்பட்ட நிலையில் 25 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த முட்டைகளில் இருக்கும் பணத்தின் உரிமையாளர் யார் என விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மதியம் 3 மணி அளவில் மாதவரம் விரைவு சாலையில் பாலத்திற்கு அருகே கட்டுக்கட்டாக 25க்கும் மேற்பட்ட முட்ட்டைகளில் பழைய ரூ.500 ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 2 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட பண முட்டைகளில் சுமார் ரூ.60 கோடி வரை இருக்கலாம் என முதற்கட்ட தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த பணத்தின் உரிமையாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.