பெண்கள் சபரிமலை தரிசனம் தீர்ப்பை ரத்து செய்க சிவசேனா 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்

பெண்கள் சபரிமலை தரிசனம் தீர்ப்பை ரத்து செய்க சிவசேனா 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்


Views: 29 Date: 2 day(s) ago
சிவசேனா கட்சி சார்பில் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் சபரிமலையில் இந்துக்களுக்கு எதிரான சில நபர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 10 லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமாக சேகரித்த மனுக்களின் முதல் பகுதியை தபால் மூலம் ஜனாதிபதி பிரதமர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கோரிக்கை மனுவாக அனுப்பினர். மேலும் இது குறித்து சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பை பொதுமக்களாகிய எங்களால் ஏற்க முடியவில்லை, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து வனப்பகுதி நடந்தது அய்யப்பனை வழிபட உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்புடையதாக இல்லை வழக்கு கொடுத்தவர்கள் இந்து சமூகத்தின் கோயில்கள் உடல் சம்பந்தப்பட்டது அல்ல சபரிமலை தொடர்பான வரலாறு பிரச்சனையாக பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம். மத்திய பாஜக அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி இந்துசமய பாரம்பரியம் பழக்கவழக்கங்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார் இந்நிகழ்ச்சியின்போது மாநில செயலாளர் அண்ணன் மாநில அமைப்பாளர் ஜெயராமன் மாநில அமைப்பாளர் சிஎஸ் முருகன் சென்னை மண்டல தலைவர் விஜயகுமார் மற்றும் சிவசேனா கட்சி மாநில நிர்வாகிகள் மற்றும் பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் பிரபு உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.